Categories
தேசிய செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விவகாரம்…. டெல்லி துணைநிலை கவர்னருக்கு சிஐசி ஆணையர் அதிரடி உத்தரவு…..!!!!

தகவல் அறியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் டெல்லி அரசின் தோல்வி குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் உதய் மஹூர்கர் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், நில விவகாரங்களை கையாளும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு, சுகாதாரம் மற்றும் அதிகாரம் போன்ற பல அரசு துறைகள் தவறான நோக்கத்துடன் உண்மையான தகவல்களை அளிக்காமல், முறையான தகவல்களை பகிர மறுக்கின்றனர் அல்லது தவறான தகவல்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வழங்குகின்றன.

இத்தகைய நடவடிக்கை, பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் டெல்லி அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையற்ற நடவடிக்கை மற்றும் பொறுப்பில்லாமையையும் காட்டுகிறது. இதனையடுத்து பொது தகவல் அதிகாரிகள் ரதங்கள் எழுத்தர்களையும் கீழ்மட்டப் பணியாளர்களையும் ஆணையத்தின் முன் ஆஜராக அனுப்புகிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து டெல்லி தொழில் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து கவனிக்கும்படி உத்திரவிட்டார். மேலும் சட்ட விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |