நாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில் பல பிரச்சனைகளுக்கும் தக்காளி இப்படி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று பார்க்கலாம்.
தக்காளியில் நமக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் இருக்கும். அதில் இருக்கும மினரல்ஸ் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
1.இதயத்துக்கு பலம் சேர்க்கும் உணவுகளில் தக்காளியும் ஒன்று, தக்காளியில் இருக்கும் லீகோடின் எனும் மூலப்பொருள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இருதயத்திற்கு பலம் சேர்கவும் பயன்படுகிறது.
2.தக்காளியி இருக்கும் அதிக அளவு வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகரிக்க சிறந்தது. கண் பிரச்சனைகளான குருட்டுத்தன்மை, மாலைக்கண் நோய் போன்றதை தடுக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
3.அதிக அளவு அண்டிஆக்சிடன்ட் மற்றும் லீகோடின் மூலப் பொருளும் இந்த தக்காளியில் அடங்கி இருப்பதால் நமது உடம்பில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அளிக்க இது பயன்படுகிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை வளரவிடாமல் தடுக்க இது ரொம்பவே சிறந்தது.
4.மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தா தக்காளி இருக்கு இதுல இருக்கிற பைபேர் குடல் பகுதியில் இருக்குற சுரப்பிகளை முறையாகச் சுரக்க செய்து உடல் இயக்கத்தை சரியாக வைத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.
5.தக்காளி பழச்சாறை நாம் முகத்திற்கு பயன்படுத்தி கழுவினால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும்.
6.சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் கேன்சர் போன்றவை தடுக்க ஒரு சிறந்த ஒன்னு தான் இந்த தக்காளி.
7.தக்காளி அதிக அளவில் சத்துக்களை கொண்டிருப்பதால் சிறுநீர்ப்பை இயக்கத்தைத் தூண்டி முறையாக செயல்படவும் நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றும் இதுவே ரொம்பவே பயன்படுது .
8.தக்காளிக்கு ரத்த அழுத்தத்தை சீராக்கும் திறனும் இருக்கு. தக்காளியில் காணப்படும் பொட்டாசியம் ரத்த நாளங்களில் ஏற்படும் பதட்டத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மன அழுத்தத்தை குறைக்கும் பயன்படுது.
9.தக்காளியில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை வலுப்பெற செய்யவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுது. தக்காளியில் உள்ள வைட்டமின் கே இரத்தம் உறைதல் மற்றும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் ரொம்பவே சிறந்தது.