Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கணிசமாக உயர்வு…!!

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பாதக்கூடு, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரக்கூடிய தக்காளி சேலம், ஈரோடு, கோவை, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு விற்பனைக்காக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்திற்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதத் தொடக்கத்தில் சந்தைகளில் 28 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி கூடையின் விலை 500 ரூபாயிலிருந்து 550 ரூபாய் வரை விற்பனையானது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கூரை தக்காளியின் விலை 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |