Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன விலை உயர்ந்துட்டா….!! வருத்தத்தில் இல்லத்தரசிகள்…. விவசாயிகளின் கருத்து….!!

தக்காளி விலை உயர்வால் விவசாயி அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விறுவிறுப்பாக விற்பனை செய்து வருகின்றனர்.

மக்கள் அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்ற அத்தியாவசியப் பொருட்களில் தக்காளி ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில் தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதன்பின் விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து சாகுபடிப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் காணப்படுகிறது. அதன்பின் தற்போது தக்காளியின் விலை உயர்ந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து விலை உயர்வு காரணமாக வழக்கமாக ஒரு கிலோ வாங்கும் இல்லத்தரசிகள் அரை கிலோவும் மற்றும் அரை கிலோ வாங்குபவர்கள் கால் கிலோவும் வாங்கியதை காணமுடிகிறது. இதற்கு விவசாயிகள் தக்காளியின் விலை உயர்வு எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்து இருகின்றனர். மேலும் கூடுதல் விலையில் வியாபாரம் செய்வதினால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று விவசாயிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |