காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர்.
இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் கூச்சல் குழப்பத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்துடன் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவியின் கையில் வைத்திருந்த ஆவணத்தை கிழித்தெறிந்தார்கள்.
தொடர்ந்து டெல்லி வன்முறைக்குறித்து விவாதிக்க வேண்டுமென்று அமளி செய்யும் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை சபாநாயகர் கண்டித்தும் தொடர்ந்து அவை மரபை மீறி செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக் தாகூர் , கவுர் கோகாய் , பிரதாபன் , தீன் சூரிய கோஸ், உண்ணிதன் உட்பட 7 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இதில் மாணிக் தாகூர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.