நடிகர் அஜித்தின் 61-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . இது அஜித்தின் 60-வது படமாகும் . ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இதையடுத்து நடிகர் அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் ‘தல 61’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சமீபத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகர் அஜித்தை சந்தித்து அவருக்கு கதை கூறியதாகவும், அந்தக் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது . இதனால் இவர்கள் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய்- அஜித் கூட்டணியில் கிரீடம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது .