நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பின் 3-வது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டுமாக இணைந்துள்ள படம் “துணிவு”. இந்த படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இதையடுத்து லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள “ஏகே 62” படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் நிலவரத்திற்காகவும், இயக்குநரின் படமாகவும் 50:50 என்ற ரீதியில் அப்படம் உருவாகியது. அதே போன்று ஏகே 62ல் அஜித்துக்காக உங்களின் பாணியை மாற்றிக்கொள்வீர்களா என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு விக்னேஷ் சிவன் கூறியதாவது “லோகேஷ் கனகராஜ் ஒரு ஆக்சன் இயக்குநர் என்பதால் நட்சத்திர நடிகருடன் இணைவது எளிதானது ஆகும். என் திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகளவு இருக்காது. இதனால் எனக்கான படமாகவும் நினைத்ததை செய்யக்கூடிய சுதந்திரமும் “ஏகே 62″ இருக்கும். இது எனது படமாகவே உருவாகும்” என அவர் தெரிவித்து உள்ளார்