Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித் பற்றி பலரும் அறிந்திராத பல உண்மைகள்…!!

இன்றளவும் திரையுலகில் அனைவராலும் நேசிக்கப்படும் தல அஜித் அவர்களின் யாரும் அறிந்திராத 10 உண்மைகள் பற்றி பார்ப்போம்.

1.  நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரங்கா கவர்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை.

2. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும், அஜித்தின் பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பு கூட முடிக்காமல் பாதியிலேயே வெளியேறி விட்டதற்கு காரணம், படிப்பை விட மற்ற துறைகளில் இவருக்கு இருந்த ஆர்வமே காரணம் என்று கூறப்படுகிறது.

3. அவர் நடித்த முதல் படமான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படம் கடைசி வரை திரைக்கு வராமல் போனதற்கு, அந்தப் படத்தின் இயக்குனர் திரு சீனிவாசன் மரணமே காரணமாக அமைந்தது.

4. அஜித் குமார் தனது உடலில் பதினைந்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ள போதும், இன்றும் தனது படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறார் என்பது அவரது தொழிலில் நேர்மையாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

5. அஜித்குமார் தமிழில் அறிமுகமான போது இவருக்கு தமிழ் சரியாக வராததால், அமராவதி, பாசமலர்கள் போன்ற படங்களுக்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசினார் என்பது சுவாரஸ்யமான ஒரு உண்மை.

6. விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் மட்டுமல்ல, இவர் இந்தியாவின் மிகச் சிறந்த பைக் ரேஸர்களில் இவரும் ஒருவர் என்று நினைக்கும்பொழுது இவரின் திறமையை நினைத்து நாம் பெருமிதம் கொள்ளலாம்.

7. அஜித்தின் இரண்டு சகோதரர்களும் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் அதேநேரம், இவரின் இரண்டு சகோதரிகளும் தனது இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவியது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் தான்.

8. புகைப்படங்களின் மீதுள்ள ஆர்வத்தால் தனது வீட்டிலேயே போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். அனைவரும் ரசிக்கும்படியான ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளார். அதோடு தன்னுடன் பழகும் அனைவரும் நன்றாக உடையணிந்து, நகங்களை எல்லாம் வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பும் நல்ல மனம் படைத்தவர் இவர்.

9. சமையல் கலையில் ஆர்வமுள்ள அஜித் பலவகையான உணவுகளை சமைத்து இருந்தாலும், இவர் சமைக்கும் பிரியாணிக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக நடிகை திரிஷா இவரின் பிரியாணிக்கு அடிமை என்பது சுவாரசியமான ஒரு உண்மை.

10. ரஜினியின் ரசிகர்கராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார். இன்று அவருக்கு நிகரான ஒரு  இடத்தைப் பிடித்து விட்ட போதிலும், இன்றும் தாம் ஒரு ரஜினி ரசிகர் தான் என்று உண்மையை மறைக்காமல் சொல்லும் உயர்ந்த மனிதர் மட்டுமல்ல, இவர் கலைமாமணி, புகைப்பட கலைஞர், பைக் ரேஸர், விமான ஓட்டுனர், சமையல் கலை வல்லுநர் என பன்முகத்திறமை ஒட்டு மொத்த உருவமாகவே திகழ்கிறார் இந்தத் தல அஜித் குமார்.

Categories

Tech |