Categories
சினிமா தமிழ் சினிமா

“தல அஜித்தா, தளபதி விஜயா”… தமிழகத்தில் யார் NO.1 நடிகர்…. நடிகை திரிஷா சொன்ன நச் பதில்….!!!!

தென் இந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா நேர்காணில் ஒன்றில் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்பாகவே அஜித் மற்றும் விஜய் அனுபவம் உள்ள நடிகர்கள். அவர்களின் படங்களை நாம் ஆடியன்சாக பார்க்கிறோம். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவருமே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள். அப்படி இருக்கும்போது அவர்களில் யார் பெரியவர் என்பதை நான் எப்படி சொல்ல முடியும் என்று கூறினார். மேலும் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் என்றும் த்ரிஷா கூறினார்.

Categories

Tech |