Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் ‘வலிமை’ – வில்லனாகும் தெலுங்கு நடிகர்?

அஜித்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இளம் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Image result for valimai

காவல் துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தையும் பே வியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு ஒருபுறம் நடக்க, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இலியானா, ரகுல் பிரீத் சிங், யாமி கௌதம் ஆகியோரை படக்குழு அணுகியதாகத் தெரிகிறது.

valimai

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இளம் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இணைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘RX 100’ திரைப்பட நடிகர் ஆவார். இதனிடையே வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |