ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார்.
12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டோனி 46 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன் பின் போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டியின் போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 6 வது ஓவரில் ஒரு பந்து கேப்டன் தோனியின் காலில் பட்டு உருண்டு சென்று ஸ்டெம்பில் பட்டது. ஆனால் பெயில்ஸ் கீழே விழாததால் அவர் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். இதனால் ராஜஸ்தான் அணி வீரர்கள் திகைத்து போயினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை கண்டு சென்னை ரசிகர்கள் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர்.
https://twitter.com/Seithi_solai/status/1112630653512638464