தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அதன் பிறகு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் 2 படங்களுக்கும் சரிசமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் துணிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.