Categories
சினிமா தமிழ் சினிமா

தல ஸ்டைலுக்கு மாறும் தளபதி!…

பிரபல முன்னணி நடிகர்களுக்கான பெயர் மற்றும் புகழ்  பெற்றவர் இளைய தளபதி விஜய் அவர்கள். இவர் அடுத்தகட்டமாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வந்துள்ளார். இந்தப் படத்தில் அவரோடு மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படமானது வரும் ஏப்ரல் மாதம் ஒன்பது-ல் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில் தளபதி விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே இயக்குநர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளாராம். இந்தக் கதையை பற்றி தளபதி விஜய்யிடம் பேசியுள்ளார். ஆனால் அந்தக் கதையை படமாக்குவது பற்றி நடிகர் விஜய் எந்த தகவலும் சொல்ல வில்லை.

மேலும் அருண் ராஜா, வெற்றி மாறன், மகிழ் திருமேனி, பேரரசு மற்றும் மோகன் ராஜா போன்ற பல இயக்குநர்களும் நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார்கள். இவற்றுள் நடிகர் விஜய் எந்த இயக்குனர் கதைகளில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் இருந்து வருகிறது. எப்பொழுதும் நடிகர் விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு முன்கூட்டிய தகவல்களை சொல்லிவிடுவார். ஆனால், இப்பொழுது ஒருபடத்தை முடித்து விட்டு அடுத்தப் படத்துக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

நடிகர் அஜித் இந்த ஸ்டைலை தான் பின்பற்றுவாராம். நடிகர் விஜய் முடிவிலிருந்து நடிகர் அஜித் ஸ்டைலுக்கு விஜய் மாறுகிறார் என சினிமா துறைகளில் கூறப்படுகிறது.

Categories

Tech |