பொங்கல் அன்று “சூரியா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.
தைப்பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு மற்றும் திரைக்கு வந்த புது படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கின்றது. தல நடிக்கும் “துணிவு” திரைப்படமும் மற்றும் தளபதி நடிக்கும் “வாரிசு” திரைப்படம் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரையரங்குகளுக்கு வெளி வருகின்றன. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக “சூர்யா 42” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் வரலாற்று கதைகளமான “சூர்யா 42” சூட்டிங் கோவாவில் நடைபெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஷூட்டிங் வெளிநாடுகளில் எடுத்து வருகின்றனர். “சூர்யா 42” திரைப்படத்தின் கதாநாயகியாக திஷா பாதனி நடிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.