Categories
தேசிய செய்திகள்

தலாய்லாமாவை உளவுப்பார்த்த பெண்?…. பின்னணி என்ன?…. போலீசார் கைது நடவடிக்கை….!!!!

பீகார் மாநிலம் புத்த கயாவில் “புத்த மஹோத்சவம்” எனப்படும் புனித போதனை நிகழ்ச்சியானது கடந்த டிச.29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இவற்றில் திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இன்று டிச 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா சென்ற 22ம் தேதி கயாவுக்கு வருகை புரிந்தார்.

இந்நிலையில் சீனப் பெண் ஒருவர், அவரை உளவு பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் பீகார் காவல்துறையினர் அப்பெண் குறித்து விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் பெயர் ஷோங் ஜியோலன் எனவும் அவர் சென்ற ஓராண்டாக இந்தியாவில் தங்கி இருந்தார் எனவும் தெரியவந்தது.

இதனிடையில் தலாய் லாமாவின் இந்தியா வருகை மற்றும் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை அப்பெண் சேகரித்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் கயாவில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறையினர், அப்பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் அந்த பெண்ணின் வரைபடத்தையும் வெளியிட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலாய் லாமாவை உளவுபார்த்ததாக கூறப்படும் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |