Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடிப் படியில் ஏறிய வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தலை சுற்றிக் கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் ராசாத்திரம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது வீட்டின் மாடிப் படியில் ஏறிக்கொண்டிருக்கும் போது தலை சுற்றிக் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |