தலையின் உள்ளே துப்பாக்கி குண்டு பாய்ந்தும் சுயநினைவுடன் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்த சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது வயதுடைய பாலஸ்தீனிய சிறுவன் தலையில் ஸ்கேன் செய்தபோது, அவனது மூளையில் துப்பாக்கி குண்டு ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் மருத்துவர்கள் அவனை பரிசோதித்தபோது தலையில் ஒரு சிறிய காயம் இருப்பதை கண்டனர்.கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் சுடும் வழக்கம் சில நாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு சுடும்போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து இருக்கலாமென்று கருதப்படுகிறது. அதனால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்த நிலையிலும் அவன் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது சுயநினைவுடன் இருந்திருக்கிறான்.
அதன் பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டினை வெளியேற்றிய நிலையில், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறான். இந்த குண்டு வேறு ஏதாவது கோணத்தில் தலையில் பாய்ந்து இருந்தால், மூளைக்கு அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தி இருக்கும்.அதனால் பல்வேறு நரம்பு மண்டலப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சிறுவன் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டவசமான செயல் என்றும் கூறியிருக்கின்றனர்.