Categories
உலக செய்திகள்

தலைமறைவான தமிழர்…. அருகில் சென்று அணுக வேண்டாம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

லண்டனில் உள்ள care facility-ல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் என்ற இளைஞர் கடந்த 7-ஆம் தேதியன்று தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டனர். அதாவது நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் அவரை பார்த்தால் அருகில் சென்று அணுக வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர்.

ஆகவே பொதுமக்கள் யாரும் நாராயணனை பார்த்தால் 999-ஐ அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆசிரியரான நாராயணனின் உயரம் 5 அடி 9 அங்குலம் எனவும் சாதாரணமான உடல்வாகுடன் இருப்பார் எனவும் காவல்துறை சார்பில் தெரிவித்தனர். இந்நிலையில் பாலசங்கர் நாராயணனை கண்டுபிடித்து விட்டதாக காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். அவர் மேற்கு லண்டனில் இருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |