Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு…!!

டெல்லியில் இன்றும்  காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா  ஊரடங்கு அமல் ஆனதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்ததால் காற்று மாசு வெகுவாக குறைந்தது. டெல்லியில் இருந்து பார்த்தால் இமயமலை தெரியும் அளவிற்கு வானம் தெளிவாக இருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பியதால் டெல்லி மீண்டும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் காற்று மாசு இருப்பதால் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலை முதலில் அடர்ந்து காணப்படும் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

Categories

Tech |