விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் ஹிபத்துல்லா இருக்கிறார். இவருடைய புகைப்படத்தை தலிபான்கள் ஒரே ஒருமுறை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களின் தலைவரான ஹிபத்துல்லா தற்போதுவரை பொதுவெளியில் இன்னும் தோன்றவில்லை.
இதுதொடர்பாக தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா கூறியதாவது, தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கடவுளின் விருப்பப்படி கூடிய விரைவில் அனைவரும் காண்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.