Categories
உலக செய்திகள்

வாக்குறுதியளித்த தலைவர்…. விமர்சனம் செய்த பிரதமர்…. கருத்து கணிப்பில் வெளியான முக்கிய தகவல்….!!

கனடாவில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9% வெற்றிவாகையை சூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கன்னட நாட்டில் வருகின்ற 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இதில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9 சதவீதம் கன்னட நாட்டில் வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிவாகையை சூடுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் கனடாவில் துப்பாக்கியின் பயன்பாடு குறித்து சில கட்டுப்பாடுகளை அமல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதனை தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |