Categories
உலக செய்திகள்

கட்சித் தலைவர்களின் மீது தேசத்துரோக வழக்கு…. காரணத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!

மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக கூறி அவர் உட்பட அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களின் மீது தேசத்துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தினர்கள் கடந்த மே மாதம் நியமித்த தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஆகையினால் மியான்மர் நாட்டின் பொதுமக்கள் ராணுவத்தினருக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் இராணுவத்தினர்கள் மியான்மர் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது கடந்தாண்டு நடைபெற்ற மியான்மர் நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி முறைகேடு செய்துதான் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடந்த மே மாதம் மியான்மர் நாட்டை கைப்பற்றிய ராணுவத்தினர்களால் நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணைய தலைவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்த ஆங் சான் சூகி உட்பட அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |