Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலைவர் பதவி ஏலம்…. இளைஞர்கள் புகார்…. போலீஸ் விசாரணை….!!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டது குறித்து இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகலாப்பாடி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூன்று பேருக்கு மேல் போட்டியிட போவதாக தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி குட்பட்ட சவேரியார்பாளையம் பகுதியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கான ஏலம் தேவாலயத்தில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின் இந்தத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அங்கு வந்து முக்கியஸ்தர்களிடம் லட்சம் ரூபாயிலிருந்து ஏலத்தை தொடங்கியுள்ளனர். இதில் பதவிக்கு ஆசைப்பட்டு போட்டியிட இருந்தவர்கள் அதிகளவில் யார் பணம் தருவது என அறிவித்துக் கொண்டே சென்றுள்ளனர். இதனால் அந்த பதவிக்கு தற்போது முடிவு காண முடியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்கு மற்றும் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |