கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 நெருங்கி வருகிறது. இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை தலைமை செயலகம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி இன்றும் நாளையும் தலைமை செயலக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.