Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’… ஏப்ரலில் படப்பிடிப்பு தொடக்கம்… எங்கு தெரியுமா?…!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் .

Official: Vijay's 'Thalapathy 65' to be directed by Nelson | Tamil Movie  News - Times of India

இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் முதல் மாதம் ரஷ்யாவில் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

 

Categories

Tech |