‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது . இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .