Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் இணைந்த சூப்பர் ஹிட் டான்ஸ் மாஸ்டர்… யார் தெரியுமா?…!!!!

தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் . இந்நிலையில் தளபதி 65 படத்தின் நடன இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

பிரபல நடன இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயின் 65வது படத்தில் தான் நடன இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் . டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கில் சூப்பர் ஹிட்டான புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளதால் நிச்சயம் படம் வேற லெவல் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை .

Categories

Tech |