தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் திலிப்குமர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத்தொடர்ந்து விஜய்யின் 65ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இந்த படத்திற்கு சண்டைப் பயிற்சி அளித்து வரும் குழுவைச் சேர்ந்த திலீப் குமார் வெளியிட்டிருந்த வீடியோவில் ‘அடுத்த வருடம் வெளியாக உள்ள தளபதி 65 படத்தின் சண்டைக் காட்சிகளை பார்த்த பிறகு கேஜிஎஃப் படத்தின் சண்டைக் கட்சிகளை மறந்து விடுவீர்கள்’ என கூறியிருந்தார் . இதனால் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் Georgia நாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இங்குதான் தளபதி 65 பட சூட்டிங் நடக்கப் போகிறதா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர் .