தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாத்தா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் படபிடிப்பு அக்டோபர் மாதம் நிறைவு பெற உள்ளதாகவும் அடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு வருகின்ற டிசம்பர் மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பினை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.