நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு ரூ-5000 பணம் அனுப்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்பணம் மதுரையை சேர்ந்த விஜயின் ரசிகர் ஒருவர்க்கு போய் சேர்ந்தது. ஆனால் அந்த நபரிடம் பணம் கொஞ்சம் இருந்துள்ளதால், விஜய் அனுப்பிய பணத்தை அவருடைய நண்பரான தல ரசிகருக்கு கொடுத்திருக்கிறார். இச்செய்தியை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.