Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் செய்தது பெரிய துரோகம்… பலனை சீக்கிரம் அனுபவிப்பார்…. விளாசும் பிரபல தயாரிப்பாளர்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. அதாவது தெலுங்கில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி ஒன்றில் கூறியது, தமிழ் சினிமாவில் விஜய் பெரிய நடிகர் என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அவருக்கு தெலுங்கில் கொஞ்சம் கூட மார்க்கெட்டே இல்லை. விஜயை விட சூர்யாவுக்கு தான் தெலுங்கில் மார்க்கெட் அதிகம். கேரளாவில் தான் விஜய்க்கு மார்க்கெட் இருக்கு. அப்படி இருக்கும்போது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்து விஜய் பெரிய தவறு பண்ணிவிட்டார்.

தெலுங்கு திரையரங்கில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் வச்சதுதான் சட்டம். அங்கே பெரிய கட்டுப்பாடு இருக்கு. ஆனால் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஒரு கட்டுப்பாடுமே இல்லை. அவங்களோடு ஹீரோ தான் வாழனும்னு அவங்க முன்னுரிமை கொடுப்பதில் தவறு இல்லை. பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா படங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு வாரிசு படத்திற்கு 25% தியேட்டர்கள் ஒதுக்கியதே பெரிய விஷயம். அதனை தொடர்ந்து தமிழகத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ராங்காகவே இல்லை. பாகுபலி, கே.ஜி.எஃப் எந்த மொழி படம் வந்தாலும் தியேட்டர்களை வாரி கொடுக்கிறார்கள். அது ரொம்ப மடத்தனமானது. வந்தாரை வாழவைக்கிறேன் என்று சொல்லிட்டு இங்கே உள்ளவர்களை சாகடிக்கிறாங்க. நடிகர் விஜய் தனது சம்பளத்தை ரூ.125 கோடி வரை ஏற்றிருப்பது தயாரிப்பாளருக்கு செய்த பெரிய துரோகம். அதனால் அவர் தனது மார்க்கெட்டை பெரிது படுத்த நினைக்கிறார். ஆனால் தமிழ் இயக்குனருக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் லாபம் செல்லும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அப்படி பண்ணவில்லை, அதன் பயனை தான் வாரிசு படத்தின் மூலம் அனுபவிக்க காத்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கொந்தளித்துள்ளார்.

Categories

Tech |