Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் நடிகை மாளவிகாவின் ஸ்பெஷல் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

தளபதி விஜய்யுடன் நடிகை மாளவிகா இருக்கும் ஸ்பெஷல் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . கடந்த இரண்டு நாட்களாக நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வருகிறார் .

 

இந்நிலையில் இன்று மாளவிகா ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறி தளபதி விஜய்யுடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்டர் படத்தில் விஜய் – மாளவிகாவின் கேரக்டர் பெயரான ஜேடி-சாரு என பதிவிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது .

Categories

Tech |