Categories
சினிமா தமிழ் சினிமா

‘சம்பவம்’ செய்யாத ‘விஜய்’ – பட தலைப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி..!!

மைனா, சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சம்பவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே, பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறஇந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Sambavam

இதற்கு இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறுகையில், ‘நான் சம்பவம் என்ற தலைப்பில் ஸ்ரீகாந்த் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன்.

Sambavam

சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Thalapathy 64 Title issue

 

இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று தெரிவித்தார்.

Categories

Tech |