Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தில் தளபதி நடிப்பு வேற லெவல்….‌ தியேட்டர்ல யாருமே உட்கார மாட்டீங்க…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, மீனா, ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில், அண்மையில் படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியானது.

இந்த பாடலை காப்பி என்று பலரும் இணையதளத்தில் ட்ரோல் செய்து வரும் நிலையில் தற்போது தமன் ஒரு முக்கிய தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோவையும் பார்த்தேன்‌. இந்த பாடலை தியேட்டரில் பார்க்கும்போது யாருக்குமே உட்கார்ந்திருந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வராது. மேலும் அப்பாடல் வரும்போது நான் உட்பட அனைவருமே பின்னி பெடல் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |