Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”….. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை 6:30 மணி அளவில் வெளியிடப்படும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை தற்போது பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஞ்சிதமே என்று ஆரம்பிக்கும் அந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி பாடியுள்ளனர். இந்த பாடலை விவேக் எழுத தமன் இசை அமைத்துள்ளார். மேலும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் தற்போது இணையதளத்தில் ரசிகர்களை கவர்ந்து படு வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடல் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |