தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் பிரகாஷ் ராஜ், குஷ்பூ, சங்கீதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்த பாடல் தமன் இசையில் தளபதி விஜய் மற்றும் மானசி குரலில் வெளியானது. இந்நிலையில் பள்ளி படிக்கும் ஒரு சிறுமி ரஞ்சிதமே பாடலுக்கு அருமையாக நடனமாடும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பள்ளி உடையில் கியூட்டாக நடனமாடும் அந்த சிறுமியின் வீடியோவை ரசிகர்கள் பலரும் தற்போது வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
Ranjithame pic.twitter.com/h51Hyb1Y1c
— Karthik Ravivarma (@Backupid11) November 23, 2022