Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியின் ரஞ்சிதமே, தலஅஜித்தின் சில்லா சில்லா”…. எந்தப் பாடல் சாதனை படைத்தது தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2-ம் பாடல் ஆன தீ தளபதி போன்றவைகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதேபோன்று நடிகர் அஜித்தின் துணிவு படத்திலிருந்து நேற்று மாலை சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ரஞ்சிதமே மற்றும் சில்லா சில்லா பாடல்களில் எது சாதனை படைத்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி சில்லா சில்லா பாடல் ரிலீஸ் ஆகி 15 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. மேலும் ரஞ்சிதமே பாடல் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது.

Categories

Tech |