தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில்ராஜு தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
ரசிகர்கள் ஆவலாக இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பணியில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.