நார்வே நாட்டின் தூதரகத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் இடம்பெறும் பிரதமர், துணை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் விவரங்களும் வெளிவந்தன. பொதுவாக தலீபான்கள் பழமையை விரும்பக்கூடியவர்கள். இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதி கிடையாது. அதிலும் ஆண்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனையடுத்து தற்போது காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதில் அங்குள்ள சரக்கு பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்கள் போன்றவற்றை அழிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஆப்கானில் இருந்த நார்வே தூதரக அதிகாரிகள் அவர்களின் சொந்த நாட்டிற்கே திரும்பிவிட்டனர். எனினும் சில அதிகாரிகள் மட்டும் அங்கே தங்கியுள்ளனர். இது தொடர்பாக ஈரான் நாட்டிற்கான நார்வே தூதர் சிஹ்வல்ட் ஹேக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “காபூலில் உள்ள நார்வே தூதரகம் தலீபான்களால் நேற்று கைப்பற்றப்பட்டது. மேலும் தூதரகத்தை ஒரு சில நாட்களில் அவர்கள் ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக அங்கிருந்த குழந்தைகளின் புத்தகங்களை தலீபான்கள் கிழிக்கும் புகைப்படம் ஓன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.