Categories
உலக செய்திகள்

புதிய அரசு ஏற்றுக்கொள்ளப்படுமா….? தயாரான நிபந்தனை பட்டியல்…. வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

புதிய அரசை அங்கீகரிக்க தலீபான்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் அங்கு புதிய அரசை ஏற்படுத்தியுள்ளனர். இந்த புதிய அரசை அனைத்து உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தலீபான்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நிபந்தனை பட்டியலை ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas வெளியிட்டுள்ளார். இந்த நிபந்தனைகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதன் மூலம் தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பட்டியலில் “தலீபான்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும், பெண்களை போற்றி பேண வேண்டும்.

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து தலீபான்கள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி வெளிப்படையாக விலகி இருக்க வேண்டும்” போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடைசியாக கூறப்பட்டது சற்று கடுமையானது என்றாலும் அது உண்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |