ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு தலீபான்கள் எந்தவித தடையும் விதிக்க கூடாது என்று 9௦ நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு அங்கு தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கான் நாடு முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைக்க திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரங்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா,பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.
அதிலும் ஆப்கானியர்ளே அவர்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதால் அங்கு மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது போன்ற சம்பவங்களால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ஆனால் அவர்களை தலீபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறக்கூடாது என்று தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து உலக நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஆப்கானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிப்பவர்களை தடுக்க மாட்டோம் என்று தலீபான்கள் கூறினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக 90 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆப்கானை விட்டு வெளியேற நினைப்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தலீபான்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அனைவரையும் தலீபான்கள் எந்தவித தடையுமின்றி வெளியேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் போன்ற 9௦ நாடுகள் கையெழுத்திட்டுள்ளனர்” என்பது குறிப்பிடத்தக்கது.