Categories
உலக செய்திகள்

தொடரும் குண்டு வெடிப்புகள்…. பலியாகிய தலீபான்கள்…. செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம்….!!

தலீபான்களை குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 35 பேர் இறந்துள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள  Nangarhar மாகாணம் ஐஎஸ்-கே பயங்கரவாதிகளின் கோட்டையாகும். இந்த மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று Nangarhar மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள சோதனை மையத்தில் கையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று தலீபான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தலீபான்கள் கூறியதில் ” கொல்லப்பட்ட 3 பேரும் பொதுமக்கள்” என்று தெரிவித்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொல்லப்பட்ட தலீபான்களிடம் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும் கடந்த சனிக்கிழமை அன்று தலீபான்கள் அமைப்பினரை குறிவைத்து ஜலாலாபாத்தில் மூன்று வெடிகுண்டு தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலீபான்கள் வாகனம் மீது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது போன்ற தொடர்ச்சியான தாக்குதல்களினால் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |