Categories
உலக செய்திகள்

பள்ளிகளைத் திறக்க உத்தரவு…. மாணவிகள் செல்ல தடை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!

தலீபான்களின் இடைக்கால அரசின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது.

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் “1996 முதல் 2001 வரை இருந்த அரசை போல தற்பொழுது செயல் பட போவதில்லை. மேலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவர்களும் கல்வி பயல, வேலைக்கு போக அனுமதிக்கப்படுவர்” என்று தலீபான்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது தலீபான்கள் ஏற்படுத்தியுள்ள இடைக்கால அரசின் கல்வித் துறை அமைச்சகம் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் அதில் மாணவர்கள் வருகை குறித்து மட்டும் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்கள் பள்ளிக்கு வர தடை விதித்துள்ளனர். இதனால் மாணவர்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். குறிப்பாக ” எங்கள் சகோதரிகள் இல்லாமல் பள்ளிக்கு செல்ல மாட்டோம்” என்ற வாசகம் எழுதிய அட்டைகளை கையில் வைத்து பிரச்சாரம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |