தலீபான்களின் புதிய ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை தலீபான்கள் ஆட்சி செய்த பொழுது திருடர்களின் கைகளை மைதானங்கள், மசூதிகள் மற்றும் விளையாட்டுத்திடல்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் முன்னால் வைத்து வெட்டினார்கள். இது போன்ற கடுமையான தண்டனைகளை பொது இடங்களில் வைத்து செய்வதற்கு உலக நாடுகள் முழுவதும் தலீபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர. இந்த நிலையில் ஆப்கானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் அதே கடுமையான தண்டனைகளை மறுபடியும் அமல்ப்படுத்துவார்கள். இதனை தலீபான்கள் அமைப்பின் நிறுவனரான Mullah Nooruddin Turabi கூறியுள்ளார்.
இவர் தலீபான்களின் பழைய ஆட்சியின்போது இஸ்லாமிய மத கொள்கைகளின்படி கடுமையான தண்டனைகளை செயல்படுத்தியவர். மேலும் பொது இடங்களில் வைத்து தண்டணை நிறைவேற்றுவது குறித்து பிற நாட்டவர்கள் எதிர்த்தனர். இருப்பினும் நாங்கள் அவர்களது தண்டனைகளையோ சட்டங்களையோ பற்றி குறை கூறவில்லை. அதிலும் எங்களின் சட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை எவரும் கூற வேண்டிய தேவையில்லை.நாங்கள் எங்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவோம். மேலும் திருக்குர்ஆனின் படி சட்டங்களை இயற்றுவோம் என்று Turabi தெரிவித்திருந்தார்.
அதிலும் தலீபான்களின் சட்டமுறைப்படி, கொலை செய்தவர்களை கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மக்கள் முன்பாக வைத்து கொலை செய்தவனை தலையில் சுட்டு கொல்வார்கள். இல்லையெனில் அதற்கு பதிலாக கொலை செய்தவரிடம் இருந்து இரத்தம் பணம் என்னும் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு குற்றம் செய்தவரை விட்டுவிடுவார்கள். பொதுவாகவே திருடர்கள் என்றால் அவர்களின் கை வெட்டப்படும். ஒருவேளை வழிப்பறி திருடர்கள் என்றால் அவர்களின் ஒரு கால் மற்றும் ஒரு கையை கொய்துவிடுவார்கள். தற்பொழுது அமைந்துள்ள தலீபான்களின் புதிய ஆட்சியில் கடுமையான தண்டனைகளை வழங்கிய Turabiக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே போன்ற தண்டனைகள் அமல்ப்படுத்தப்படும் என்று Turabi தெரிவித்துள்ளார். ஆனால் அது மாதிரியான கடுமையான தண்டனைகள் பொது இடங்களில் வைத்து இல்லாமல் மறைவான பகுதியில் அளிக்கப்படும் என்று Turabi கூறியுள்ளார். இது போன்ற கடுமையான தண்டனைகள் குறித்து மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், கடுமையான தண்டனைகளால் தலைநகர் பாதுகாப்பாக உள்ளது. மேலும் தற்போது ஆட்சியில் திருடர்கள் சிக்கினால் அவர்களின் முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால் இவ்வாறு பொது இடங்களில் வைத்து ஒருவர் அவமதிப்பதைக் காண்பதற்கு கடினமாக இருக்கும். இருப்பினும் இதனை காண்பவர்கள் எவரும் இனிமேல் திருடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கடைக்காரர் ஒருவர் கூறியதில் “ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பாக திருடர்கள் சாதாரணமாக தெருக்களில் நடமாடுவார்கள். இதனால் மக்கள் இருள் சூழ்ந்த பிறகு வெளியே போவதை தவிர்ப்பார்கள். ஆனால் தற்பொழுது இருட்டிய பின்பும் கடையை திறந்து வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.