தலீபான்களின் செய்தி தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு அவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இஸ்லாமியத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படமாட்டாது.
அதற்கு பதிலாக இதனை நம்ப வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தேவையற்றவை. ஏனெனில் பெண்கள் வீட்டில் எப்பொழுதும் முடங்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எந்த நேரமும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. இருப்பினும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பயணம் செய்ய வேண்டுமெனில் பெண்கள் ஒரு ஆண் நபரை துணையாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சரியான விதிமுறைகள் உருவாகும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கடந்த செவ்வாய்க்கிழமை என்று முஜாஹித் தெரிவித்திருந்தார். ஏனெனில் சில தலீபான்களுக்கு பெண்களை துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று பயிற்சி அளிக்கவில்லை. குறிப்பாக புதிய மற்றும் நன்கு பயிற்சி பெறாத தலீபான்கள் பெண்களை தவறாக நடத்தலாம் என்பதை நினைத்து வருத்தமாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.