Categories
உலக செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு…. தலீபான்கள் செய்தி தொடர்பாளர்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள்….!!

இடைக்கால அமைச்சர்கள் குழு குறித்த விவரங்களை தலீபான்கள் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறதை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் அந்நாட்டை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து விமானம் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு தப்பி சென்றனர். அதிலும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள்  வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதற்கிடையில் தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது இதுகுறித்து தலைநகர் காபூலில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாஹித் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது இடைக்கால அரசில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் ” பிரதமராக முல்லா முகம்மத் ஹஸன் அகுந்த் பொறுப்பு வகிப்பார். இவர் தலீபான்கள் இயக்கத்தின் நிறுவனரான முல்லா ஓமருடன் நெருங்கிய தொடர்புடையவர். இவரை அடுத்து முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் மவுலவி அதுல் சலாம் ஹனாபி இருவரும் துணை பிரதமராக நியமனம் செய்யப்படுவார்கள். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சராக  சிராஜுதீன் ஹக்கானி செயல்படுவார். குறிப்பாக இவர்  ஹக்கானி ஆயுதக்குழுவின் தலைவருடைய மகன்.

மேலும் இந்த குழுவினை அமெரிக்கா தீவிரவாத பட்டியல்களில் வைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா முகம்மத் யாகூப் முஜாஹித் செயல்படுவார். இவர் தலீபான்களின் நிறுவனரான முல்லா ஓமரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மவுலவி ஆமிர் கான் முட்டாக்கி வெளியுறவுத்துறை அமைச்சராகவும் முல்லா ஹிதாயத் பத்ரி நிதித்துறை அமைச்சரகாவும் செயல் புரிவார்கள்.  இவர்களை பின்பற்றி அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி என்பவர் நீதித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்க உள்ளார். மேலும் கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா என்பவர் தகவல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்படுவார்.

இறுதியாக துணை பாதுகாப்பு இயக்குனராக முல்லா ரஹமத்துல்லா நஜீப் பொறுப்பு வகிப்பார். இவர்கள் அனைவரும் முறையான ஆட்சி அமைக்கும் வரை இடைக்கால அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என்றும் அரசியலை ஒழுங்காக வழி நடத்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்கள்  ஆப்கானிஸ்தானின் அமைச்சர் குழுவில் பெண்களுக்கு இடம் இல்லையா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது ” இது இடைக்கால அமைச்சர் குழு தான். மேலும் அமைச்சர்கள் முழுமையாக நியமனம் செய்யப்படவில்லை. குறிப்பாக நாட்டின் பிற பகுதியில் இருப்பவர்களும்  வெகு சீக்கிரம் தேர்வு செய்யப்படுவர்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்க உள்ளவர்  ஐ.நா.சபையின் தீவிரவாத பட்டியலில் தேடப்படும் பயங்கரவாதி ஆவார்.

மேலும் உள்துறை மந்திரியாக செயல்பட உள்ளவர் அல்கொய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஹக்கானி ஆயுதக் குழுவின் தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இடைக்கால அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கி, ஈரான், கத்தார் போன்ற ஒன்பது நாடுளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பின் தலைவரான முல்லா முகம்மத் ஹஸன் அகுந்த்  முதன் முதலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” இஸ்லாமிய சட்டங்களுடன் கருத்து வேறுபாடு இல்லாத உலகநாடுகளின் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை பின்பற்றுவோம். அதிலும் வருங்காலத்தில் அரசின் நிர்வாகம் மற்றும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளும் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |