Categories
உலக செய்திகள்

‘தொடர்ந்து கண்காணிக்கப்படும்’…. தலீபான் அரசியல் தலைவருடன் சந்திப்பு…. கத்தார்கான இந்திய தூதர்….!!

இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்தியா வெளியுறவுத்துறை செயலாளரான  ஹர்ஷ் வர்தன் சிரிங்லா  3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சரான  அன்டோனி பிளிங்கன் போன்ற முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கத்தார் நாட்டிற்கான இந்தியா தூதர் தீபக் மிட்டல் தலீபான்களின் அரசியல் தலைவரான தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் உடன் அண்மையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் இந்தியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கானிஸ்தானை கருவியாக பயன்படுத்தக்கூடாது என தீபக் மிட்டல் கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்கள், சிறுமிகள், சிறுபான்மையினர் போன்றோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘இந்தியாவின் கவலையை கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்’ என்று தலீபான்களின் அரசியல் தலைவரான ஷெர் முகமது அப்பாஸ் கூறியுள்ளார். அதிலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். மேலும் தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானில் அனுமதியளிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். அதன் படி அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |