ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தலீபான்களுடன் தொடர்பில் இருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து மீட்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு செயல்படும் உலகநாடுகளுக்கு புதிதாக ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறும் ஆப்கான் மக்களை காப்பாற்றும் நோக்கில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களை பிரான்ஸ் நாட்டுக்கு வரவேற்கிறார்.இதுவரை 1300 ஆப்கானியர்களை பிரான்ஸ் அரசு உதவி கரம் நீட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானில் இருந்து தப்பி வருபவர்களில் ஒரு சிலர் தலீபான்களின் ஆதரவாளர்களாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டவர் ஒருவர் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தலீபான்களுடன் தொடர்பு கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார். இவர் மீட்பு நடவடிக்கையின் போது பிரான்ஸ் தூதரகத்தில் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளார். ஆகவே அவரையும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்கள்.
ஆனால் பிரான்ஸ் உளவுத்துறை விசாரணை மேற்கொண்டதில் அவருக்கும் தலீபான்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவரே தான் தலீபான்களின் உறுப்பினர்களில் ஒருவர் என்றும் சோதனை மையத்தில் கையில் ஆயுதம் ஏந்தி தலைமைப் பொறுப்பில் பணியாற்றியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை பிரான்ஸ் அமைச்சராக தரப்பில் வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.