Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கையில் சிக்கிய நாடு…. கலவர பூமியாக மாறிய ஆப்கானிஸ்தான்…. தொடரும் வன்முறை சம்பவங்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களினால் ஏற்பட்ட அனைத்து தாக்குதல் மற்றும் அடக்குமுறைகளை பற்றிய முழு விவரங்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. இதனால் அவர்களுக்கும் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் போராடி தோற்றனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் நகரை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி நாட்டின் மொத்த அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியிலிருந்து ஆப்கானில் நடந்தவை குறித்து முழுவிபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முதலில் நேட்டோ படைகள் அந்நாட்டில் அமைதி நிலவுவதற்காக திரும்பப் பெறப்படும் என்று கடந்த ஏப்ரல் 14ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

இதனையடுத்து மே 1 ஆம் தேதி அமெரிக்கா படைகள் தங்களது தளங்களை தெற்கு பகுதியிலிருந்து காலி செய்ய தொடங்கினர். இதனை தொடர்ந்து மே 5 ஆம் தேதி ஹெல்மாண்ட்டில் இருக்கும் ஆறு முக்கிய மாகாணங்களில் உள்ள பாதுகாப்பு படையினரின் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இதன் பின்பு மே 11 ஆம் தேதி அன்று நேர்க்ஹ் என்ற காபூலுக்கு அருகில் இருக்கும் மாகாணத்தை தலீபான்கள் கைப்பற்றினர். இந்த சம்பவத்தை அடுத்து ஜூன் 7ல் சுமார் 150 ராணுவ வீரர்களை ஒரே நாளில் தலீபான்கள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும் 34 மாகாணங்களில் 26 மாகாணங்களை அவர்கள் கைப்பற்றினர். 

இதனை அடுத்து ஜூன் 22 ஆம் தேதி தலீபான்களின் கட்டுப்பாட்டில் இல்லாத அந்நாட்டின் வடக்கில் உள்ள பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானுக்கான  ஐ.நா.பிரிவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஜூலை 2 ஆம் தேதி பக்ராம் விமானப்படை தளத்திலிருந்து நேட்டோ படைகள் முழுவதுமாக வெளியேறினர். இதற்கு பிறகு ஜூலை 5ல் தலீபான்களின் அமைதி கடிதத்தை அந்நாட்டு அரசிடம் ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கவுள்ளோம் என்று அவர்கள் கூறினர். இதனை அடுத்து ஜூலை 25 ஆம் தேதி அமெரிக்கா மீண்டும் தலீபான்களை தடுத்து நிறுத்துவதற்காக தங்களின் ஆதரவை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜூலை 26 ஆம் தேதி தலீபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த தாக்குதலில் சுமார் 2400 பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதன் பின்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி zaranj  மாகாணத்தை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி அங்கு அவர்களின் கொடியை நாட்டியுள்ளனர். இதனை அடுத்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி அங்கிருக்கும் அனைத்து மாகாணங்களையும் சுற்றி வளைத்த தலீபான்கள் காபூலுக்குள் செல்ல தயாராகிவிட்டனர்.

இறுதியாக ஆகஸ்ட் 15-இல் காபூலை முழுமையாக ஆக்கிரமித்த பின்னர் அவர்களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் சமரச முடிவு எடுக்கப்படாததால் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அதிபர் மாளிகையை தலீபான்களின் அமைப்பு தங்கள் கைவசப்படுத்தினர். குறிப்பாக அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தஜகிஸ்தான் தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு இடம் கிடைக்காததால் ஓமனில் தரையிறங்கியுள்ளார். இதன் பின்பு ஓமனிலிருந்து அமெரிக்கா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |