Categories
உலக செய்திகள்

அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா…. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இந்தியா…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக தலீபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வைத்து இந்தியா ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதியன்று மாஸ்கோவில் வைத்து ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

India accepts Russia's invite for Afghan talks: Taliban leadership to be  present - Oneindia News

இதில் நாம் கலந்துகொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளருக்கு நிகராக பதவி வகிக்கும் ஒருவர் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |